வாளைச் சுமக்கிறாயா?
அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும். சங். 54:5
நீ வாளைச் சுமந்து திரிகிறாயா? ஜாக்கிரதை! கோலியாத்தின் தலையை வெட்டுவதற்கு தாவீதுக்கு ஒரு அற்புதமான வாள் எங்கிருந்து கிடைத்ததென்று உங்களுக்கு தெரியுமா? அது கோலியாத்திடம் இருந்தது (1 சாமு. 17:51).
மற்றவர்களுக்காக நீ கண்ணி வைத்தால், நீயே அதில் சிக்கிக்கொள்வாய். (நீதி. 26:27). உன் எதிரிகளுக்கு விரோதமாக நீ உன் மனதையும், வார்த்தைகளையும், செயல்களையும் உருவாக்குகிறாயா? அப்படியென்றால், அவையெல்லாம் உனக்கே அழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள். இறுதியில் உனக்கே அழிவை ஏற்படுத்தும் எதையும் சுமந்து திரியாதே!
வாளை எடுப்பவன் வாளாலேயே கொல்லப்படுவான்!
ஜெபம்: கர்த்தாவே! என் வாழ்நாள் முழுவதும் எனக்கு எதிரிகளே இராதபடி, உம்முடைய அன்பினால் என்னை அதிகமாய் நிரப்பும். ஆமென்!
(translated from English to Tamil by Melwin Kingsley)

Comments
Post a Comment