கவலைப்பட்டு சோர்ந்துபோய்விட்டீர்களா?
என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும்; என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன. (சங் 55: 2)
‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதிருங்கள்' என்று வேதம் சொல்கிறது (பிலி. 4: 6). எதைப் பற்றியும் ஒருபோதும் கவலைப்படாத யாராவது இவ்வுலகில் உண்டா? இல்லவே இல்லை! இந்த வசனம் கிரேக்க மொழியிலிருந்து 'தொடர்ந்து கவலைப்படாதிருங்கள்' என மொழிபெயர்க்கப்படலாம்.
மனிதன் எதைப்பற்றியாவது கவலைப்படுவது இயற்கையானது. ஆனால் நீங்கள் தொடர்ந்து கவலைப்பட்டால், நீங்கள் சோர்ந்து போய்விடக்கூடும். அதினால் சேதம் மோசமாக இருப்பதுமட்டுமல்ல, அதைச் சரிசெய்ய கடினமாக இருக்கும்.
என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்களா? (மத் 6:25). அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காக உங்கள் துக்கம், மனவேதனைப் பற்றி எப்படி? (ரோமர் 9: 2)
நாளை எவ்வளவு கவலைப்பட வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே நாளை பற்றி கவலைப்படுங்கள்.
ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னைக் கவனித்துக்கொள்வதால், என் கவலைகள் அனைத்தையும் உங்களிடம் கொடுத்துவிட எனக்கு உதவும். ஆமென். (1 பேது. 5: 7).
(translated from English to Tamil by Melwin Kingsley)

Comments
Post a Comment