தொடர் தாக்குதல்!


தேவனே, எனக்கு இரங்கும். மனுஷன் என்னை விழுங்கப் பார்க்கிறான். நாள்தோறும் போர் செய்து என்னை ஒடுக்குகிறான். என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப் பார்க்கிறார்கள். எனக்கு விரோதமாய் போர் செய்கிறவர்கள் அநேகர். சங்.  56:1-2.

 'சர்வதேச பெருந்தொற்று பரவல்' காரணமாகக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. அதனால் அவர்கள் தூங்கும் நேரம் தவிர்த்து, எப்போதும் வீட்டில் சத்தமாக இருக்கிறது. தேவனுடைய ஜனங்களுக்கும், இந்த உலகம் இரைச்சல் மிகுந்த இடமாகவே உள்ளது. அவர்கள் இவ்வுலகில் வாழ்கிறபோது, அநேகக் காரியங்களை சகித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. தாவீது, தனது திரளான சத்துருக்களைப் பற்றியும், அவர்களது தொடர் தாக்குதலை தான் எதிர்கொண்டது பற்றியும் கூறுகிறார் (சங். 56:1-2).

இவ்வுலகத்திலே, தெய்வபக்தியானது துன்புறுத்தல்களை ஈர்க்கிறது (2 தீமோ. 3:12). வரலாற்றில், அநேகக் கிறிஸ்தவர்கள் அதையே எதிர்கொண்டனர். இயேசுவின் சீஷர்கள் கூட துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டனர்! இயேசு தாமும் அவ்வண்ணமே கொல்லப்பட்டார்! இன்றும், இது தொடர் கதையாய் உள்ளது. இனியும், நாம் இவ்வுலகில் இருக்கும் வரைக்கும், இதுவே தொடரும்.

கிறிஸ்துவினிமித்தம் துன்புறுத்தப்படுகிறீர்களா? சந்தோஷப்படுங்கள் (யாக் 1:2-4). கிறிஸ்துவுக்காகப் பாடுகளை சகிப்பதற்கு, நீங்கள் எந்த அளவுக்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள்? 

துன்மார்க்கர் அல்ல, நீதிமான்களே துன்புறுத்தப்படுகின்றனர். 

ஜெபம்: கர்த்தாவே! நான் உம்மை நம்பவும், துன்புறுத்தல் மீதான சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

Who is truly wise?

What is your good name?

God doesn’t exist!?