தனிமை ஆசை?
பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன். சங் 55: 8
இந்த நாட்களில் சமூக தூரத்தை பின்பற்றுவது முக்கியம்; ஆனால், தனிமை (சமூக தனிமை) பற்றி என்ன? இந்த சங்கீதத்தில் தாவீது ஏறக்குறைய ஒரு சந்நியாசி வாழும் வாழ்க்கையையே விரும்புகிறார். இந்த உலகத்தின் கஷ்டங்களிலிருந்து ஓட நீங்கள் எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா? வெறுப்பு, ஊழல், சுயநலம் மற்றும் எதுவல்ல?
ஒருமுறை மறுரூபமலையில் பேதுரு இயேசுவிடம், "நாம் இங்கே இருப்பது நல்லது; நான் மூன்று தங்குமிடங்களை உருவாக்குகிறேன்" என்றான். ஆனால் இறுதியில் அவர்கள் கீழே வர வேண்டியிருந்தது (மத் 17: 1-9).
ஓநாய்களிடையே இருக்கும் ஆடுகளைப் போல நாம் இந்த பூமியில் இருக்கிறோம்; ஆனால் நாம் பாம்புகளைப் போல புத்திசாலித்தனமாகவும், புறாக்களைப் போல கபடமற்றவர்களாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சோதனைகளும், உபத்திரவங்களும் இருக்கும் (மத் 10: 16-19).
சமூக தனிமை என்பது சமூக வேற்றுமைக்கு ஒரு தீர்வு அல்ல. சமூகத்தில் வாழும் தெய்வீக மனிதர்களால் சமூக நல்லிணக்கம் ஏற்படுகிறது.
ஜெபம்: ஆண்டவரே, நான் சமூக தனிமைக்கு ஆசைப்படாமல், என் சமுதாயத்தில் உம்மைப் பிரதிபலிக்க எனக்கு உதவும். ஆமென்!
(translated from English to Tamil by Melwin Kingsley)

Comments
Post a Comment