வார்த்தைகளைப் புரட்டுதல்!
B. A. Manakala
நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள். எனக்குத் தீங்கு செய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது. சங். 56:5.
என் நண்பன் என்னிடம், "இன்றியமையாத வேளையில் என் கடன் அட்டையைப் பயன்படுத்திக் கொள்" என்று கூறியிருந்தான். நானோ, "என் நண்பன் என்னிடம் அவனது கடன் அட்டையை, எனக்கு விருப்பமான எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கிறான்" என்று சொல்லிக் கொண்டு திரிய ஆரம்பித்தேன்.
மனிதன் ஏதேன் தோட்டத்திலிருந்தே வார்த்தைகளைப் புரட்ட ஆரம்பித்து விட்டான் (ஆதி 2:17; 3:3). சில ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைப் புரட்டுகிறார்கள் (2 பேது. 3:16).
சாத்தானும் இதில் கைதேர்ந்தவன்! அவன் இயேசுவிடம் சத்தியத்தைப் புரட்டுகிறவனாக வந்தான் (மத். 4:1-11).
தேவனுடைய மற்றும் பிறருடைய வார்த்தைகளைப் புரட்டாமல் இருப்பதற்கு, நீங்கள் எந்த அளவுக்கு ஜாக்கிரதையாய் இருக்கிறீர்கள்?
பிறருடைய கருத்தைப் புரட்டுகிறதாக நீங்கள் நினைத்தால், பேசாமல் அமைதியாயிருப்பதே மேல்!
ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய வார்த்தையைப் புரட்டாமல், அதன் உட்பொருளை விளக்க, பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு என்னை வழிநடத்தும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)

Comments
Post a Comment