வழுக்கு நிலம்!
B. A. Manakala
நான் தேவனுக்கு முன்பாக, ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும் படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? சங். 56:13.
ஓர் மழைக்கால மாலை வேளையில், காலாற நடந்து வரும்படி, குடும்பமாக நாங்கள் ஒரு நெல் வயல்வெளிக்குச் சென்றோம். நாங்கள் எச்சரித்தும்கூட, அங்கே எங்கள் குழந்தைகள் அடிக்கடி வழுக்கி விழுந்தனர். நான் என் மகனுடைய கரத்தைப் பிடித்துக் கொண்ட போதோ, அவன் வழுக்கினாலும் கீழே விழவில்லை.
இவ்வுலகில் வாழ்கிறதென்பது, சறுக்குகிறதற்கு வாய்ப்புகள் அதிகம் நிறைந்த வழுக்கு நிலத்தில் நடப்பது போன்றது. நாம் நன்றாக இருக்கிறோம் என்றும், விழவே மாட்டோம் என்றும் பெரும்பாலான சமயங்கள் நாம் சிந்திக்கிறதுண்டு. ஆனால்.., ஜாக்கிரதையாய் இருங்கள்! (1 கொ 10:12). தேவன் உங்களுடைய கரத்தைப் பிடித்துக்கொள்ள நீங்கள் அவரை அனுமதித்திருக்கிற வரையிலும், அவர் உங்கள் காலைத் தள்ளாட ஒட்டார் (சங். 121:3) என்ற வாக்குத்தத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்.
'நீங்கள் விழமாட்டீர்கள்' என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என்னென்ன காரியங்களெல்லாம் உங்களால் செய்யக் கூடும்?
வழுக்கு நிலத்தின் மீது அதிக கவனம் செலுத்தாதீர்கள். உங்களைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிற உங்கள் பரம தந்தையின் மீது கவனத்தை செலுத்துங்கள்.
ஜெபம்: பிதாவே! உம்முடைய கரத்தை விட்டுவிட்டு ஓடிப்போய், நானாகவே இவ்வுலகில் நடக்க முயற்சிப்பதை நீர் என்னில் அனுமதிக்காதேயும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)

Comments
Post a Comment