உன்னை அழிக்க ஆவலாய்..!!
B. A. Manakala
அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள். சங். 56:6.
யாராவது உண்மையான வானத்திற்கு வண்ணம் தீட்ட முடியுமா? யாராவது கடலைத் தித்திப்பாக்கப் போதுமான சர்க்கரையை அதில் போட முடியுமா?
உங்கள் சத்துரு உங்களைக் கொல்ல முயற்சிக்கையில் ஏற்படும் விளைவும் இதற்கு ஒத்ததே! தேவன் உங்களுக்காக அமைத்துக் கொடுத்திருக்கிற ஆயுட்காலத்தை நீங்கள் நிறைவு செய்யும் வரைக்கும், யாரும்..., எதுவும்... உங்களைக் கொல்ல முடியாது. குறிக்கப்பட்ட காலமே வந்தாலும், உங்கள் சத்துருவால் உங்கள் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியுமே அன்றி, உங்கள் ஆவியை அல்ல! அதனால், உங்கள் சத்துரு 'நீ கொல்லப்படப் போகிறாய்' என்று கூறுகையில், யாரோ ஒருவர் ஆகாயத்திற்கு வண்ணம் தீட்ட முயற்சிப்பதாக அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
எந்த வகையான சத்துருக்கள் உங்களை அழிப்பதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்? உங்கள் சத்துருவின் பொய்களை நம்பாதிருக்க, நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்கள் ஆயுட்காலம் உங்கள் சிருஷ்டிகரால் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த முடிவைக் காண, அதை அவரிடமே திரும்ப அளியுங்கள்!
ஜெபம்: கர்த்தாவே! நீர் எனக்குப் பரிசாக அளித்த இந்த வாழ்க்கைக்காக உமக்கு நன்றி. என் வாழ்வின் முழுமையான கட்டுப்பாடும் உம்மிடம் உள்ளதை விசுவாசிக்க உதவி செய்யும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)

Comments
Post a Comment