பரத்தில் உங்கள் புட்டி!
B.A. Manakala
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? சங். 56:8.
நான் வெங்காயம் அரிகையில், எனக்கு எளிதில் அருவியெனச் சொரிகிற கண்ணீர், தினமும் ஜெபிக்கையில் மட்டும் வருவதே அரிதாகிறது!
நாம் பரலோகத்திற்குப் போகிற பொழுது, அங்கே ஒரு வியப்பூட்டும் புட்டியை நாம் பார்க்கப் போகிறோம் (சங் 56:8). துக்கம், மகிழ்ச்சி, நேர்மை போன்ற வெவ்வேறு உணர்ச்சிகளைக் குறிக்கக் கண்ணீர் வெளிப்படலாம். பொதுவாக, நம் சொந்தத் தேவைகளுக்காக நாம் ஊக்கமாய் ஜெபிக்கையில், நம்மால் கண்ணீர் சிந்த முடிகிறதல்லவா?
துயரப்படுகிறவர்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத் 5:4). விருந்து வீடுகளைக் காட்டிலும், துக்க வீடுகளில் உங்கள் நேரத்தைச் செலவிடுதல் நலம் (பிர 7:2). நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம் (பிர 7:3). ஆகிலும், ஆரோக்கியமற்ற துக்கத்தையும், கவலையையும் ஊக்குவிக்காதீர்கள் (பிர 11:10). ஆவியின் கனியுள் ஒன்று 'சந்தோஷம்' என்பதை நினைவில் கொள்ளுங்கள் (கலா 5:22).
பரலோகத்தில் சேமிப்பது உங்கள் முன்னுரிமையாய் உள்ளதா?
உலகக் கவலை க்ஷணப் பொழுதே; பரலோக மகிழ்ச்சியோ நித்தியம்!
ஜெபம்: கர்த்தாவே! நான் பிறருக்காக அழுவது அர்த்தமுள்ளதாய் அமையவும், நீர் தருகிற நித்திய மகிழ்ச்சி மீது இன்னும் கவனம் செலுத்தவும் எனக்குப் போதித்தருளும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)

Comments
Post a Comment