அவரது மகிமை எங்கும் நிறைந்திருக்கிறது!

B. A. Manakala

தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும். உமது மகிமை பூமியனைத்தின் மேலும் உயர்ந்திருப்பதாக. சங். 57:5.

"இது என்ன எரிகிற வாசனை?" என ஒருவரையொருவர் வினவிக் கொண்டே, வீட்டின் எல்லா மூலைகளிலுமிருந்து, நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம். அடுப்பில் எதையோ வைத்து விட்டு, அதை நான்  மறந்தே போனதை கடைசியாக  நாங்கள் கண்டறிந்தோம்! அந்த வாசனை வீடு முழுவதையும் நிரப்பி இருந்தது.... அக்கம்பக்கத்தையும் கூட நிரப்பி இருக்கக் கூடும்! 

தேவனுடைய மகிமை பூமி எங்கிலும் பிரகாசிக்கிறது (சங். 57:5,11; 108:5).
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்திருக்கிறது (8:1). அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தேவனிடமிருந்து ஒளித்துக் கொள்ளக்கூடிய ஓர் மறைவிடத்தை, ஒருவரும், ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது (எரே. 23:24). 'கடவுள் இல்லை' என்று சொல்பவரும் கூட, அவருடைய மகிமையில்தான் வாழ வேண்டியதாய் இருக்கிறது. போர், பஞ்சம், வெள்ளம், சர்வதேசப் பெருந்தொற்று பரவல்.., என எது இருந்தாலும் பரவாயில்லை... அவரது மகிமை பூமியை நிரப்பி இருக்கிறது. 

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், தேவனுடைய மகிமையை நீங்கள் எவ்விதம் அனுபவிக்கிறீர்கள்?

தேவன் ஒளி, இருள் என இரண்டையுமே உண்டாக்கினார் (ஏசா. 45:7). ஆயினும், இருளானது தேவன் அமைத்திருக்கிற எல்லைகளுக்கு அப்பால் பரவ முடியாது!

ஜெபம்: கர்த்தாவே! பூமியில் உள்ள எல்லாக் கஷ்டங்களுக்கு மத்தியிலும், நான் உமது மகிமையைக் காண்பேனாக! ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

Who is truly wise?

What is your good name?

God doesn’t exist!?