பரிசு வந்த பாத்திரத்தைத் திரும்பக் கொடுத்தாயிற்றா?
B. A. Manakala
தேவனே, நான் உமக்குப் பண்ணினபொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன். சங். 56:12.
நாங்கள் சில வருடங்கள் வட இந்திய கிராமம் ஒன்றிலே வாழ்ந்தோம். எங்கள் அண்டை வீட்டாருக்கு நாங்கள் ஏதாவது சிறப்பான உணவுப் பதார்த்தங்களைப் பகிர்ந்தளிக்கிற போதெல்லாம், அந்தப் பாத்திரத்தை அவர்கள் ஒருபோதும் வெறுமையாய்த் திருப்பி அனுப்புவதில்லை. இதைக் கற்றுக் கொண்டு, நாங்களும் அதையே பழக்கப்படுத்திக் கொள்ள, எங்களுக்குச் சில காலம் எடுத்துக் கொண்டது.
இங்கே தாவீது, தேவன் தன் வாழ்வில் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், நன்றி பலிகளை ஏறெடுக்கிறார் (56:12).
எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்துங்கள் (1தெச 5:18). ஏனெனில், நன்றியறிதலுள்ள இருதயத்தைத் தேவன் மெச்சுகிறார். மேலும், நமது கண்ணோட்டங்களை வடிவமைப்பதில், ஓர் நன்றியுள்ள இருதயம் பெரும் பங்காற்ற முடியும்.
பரலோகில் இருந்து பரிசு வந்த பாத்திரங்கள் உங்கள் வீட்டிலே வெறுமையாய்க் குவித்து வைக்கப்பட்டுள்ளனவா? தினமும் ஏதாவதொன்றை, நாம் எப்படிக் கர்த்தருக்குத் திரும்பக் கொடுக்கலாம்?
நாம் பரலோகில் இருந்து நன்மைகளைத் தொடர்ச்சியாய்ப் பெறுகிறோம்; அதற்கு பதிலாக, மிக அரிதாகவே எதையாவது திரும்பக் கொடுக்கிறோம்!
ஜெபம்: கர்த்தாவே! நான் நன்றி பலிகளைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருக்க எனக்கு நினைவூட்டியருளும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)

Comments
Post a Comment