நமது அணித் தலைவர்

B. A. Manakala
எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். சங். 57:2.

2004ம் ஆண்டில், எனது முதல் சர்வதேச பயணத்தின் போது,  நான் கவனித்துக் கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களைப் பற்றி அறியாதவனாய் இருந்தேன். ஆயினும், நான் நம்பிக்கையுடன் பயணித்தேன். ஏனெனில், அனைத்து விவரங்களையும் கவனித்துக் கொள்ளுகிற அணித் தலைவர் எங்களுக்கு இருந்தார். 

தாவீதுக்கும், தனது ‘அணித் தலைவரிடத்தில்’ நம்பிக்கை இருந்தது. அவரது சத்துரு அவரைத் துரத்திக் கொண்டிருந்த போதிலும், எல்லாக் காரியங்களும் தன் தலைவரால் கவனித்துக் கொள்ளப்படும் என அறிந்திருந்தார் (சங். 57:2).

நம் தலைவர், நம் ஒவ்வொருவர் மீதும் அக்கறையோடு, தனிப்பட்ட விதத்திலே கவனம் செலுத்துகிறார் (சங். 23:1-4). நம் வாழ்விற்கான நோக்கங்களை அவர் நிறைவேற்றுகிறார் (57:2). அவர் நம்மை வெற்றிக்கு நேராய் வழிநடத்துவார் (1 கொ. 15:57). 

நீங்கள் சரியான விஷயங்களை செய்கிறீர்களா என்றும், சரியான பாதையில் செல்கிறீர்களா என்றும், உங்கள் அணித் தலைவருடன் எவ்வளவு அடிக்கடி சரிபார்த்துக் கொள்கிறீர்கள்? 

தலைமைத்துவ பங்கை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏனெனில், மிகவும் தகுதி வாய்ந்த உங்கள் அணித் தலைவரின் செயல்திறனை நீங்கள் இழக்க நேரிடும். 

ஜெபம்: கர்த்தாவே! என் பயணத்தை நிறைவு செய்யும் வரைக்கும், தயவுசெய்து நீர் என் அணித் தலைவராய் இருக்க வேண்டுகிறேன். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

Who is truly wise?

What is your good name?

God doesn’t exist!?