இதை நான் அறிவேன்!
B. A. Manakala
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில், என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள். தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். சங். 56:9.
ஒருமுறை, நான் அங்காடிக்குச் சென்றேன். கடையில் வாங்க வேண்டிய எல்லாவற்றையும் வாங்கிவிட்டு, நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் கடைக்குப் போகிற பொழுது, என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன் என்பதை மறந்தே போனேன்!
கர்த்தர் தன் பட்சத்தில் இருக்கிறார் என்பது தாவீதுக்குத் தெரியும் (56:9). இந்த அறிவே, 'வெறும் மனிதர்கள் தனக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாது' என்று விசுவாசிக்கவும் அவருக்கு உதவியது (58:11).
இஸ்ரவேலர்கள் அடிக்கடி தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, அந்நிய தேவர்களின் பின்னே சென்றார்கள் (நியா. 3:7). ஜனங்கள் அந்நிய தேவர்களின் பக்கம் திரும்பும் போது, தேவன் மனம் வருந்துகிறார் (எரே. 18:15).
சில சமயங்களில், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்தே விடுகிற அளவுக்கு, நாம் அவரைப் பழகி விடுகிறோம்!
'தேவன் உங்களோடு இருக்கிறார்' என்பதை உங்களுக்கு நீங்களே எவ்வளவு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறீர்கள்?
'சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களோடு இருக்கிறார்' என்பதை நீங்கள் கண்டுணர்ந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும், அவர் இன்னும் ஒரு படி உங்களை நெருங்கி வருகிறார்.
ஜெபம்: கர்த்தாவே! நீர் என்னோடு கூட இருக்கிறீர் என்பதை நான் ஒவ்வொரு கணமும் அறிந்து கொள்ள எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)

Comments
Post a Comment