கண்ணியில் விழ விருப்பமா?

B. A. Manakala

என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்து போயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். சங்.  57:6.

பல வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டிலே ஒரு பூனை இருந்தது. ஒரு நாள், நான் அதற்கு ஒரு கண்ணி அமைத்தேன். வைத்த கண்ணியை மறந்தவனாக, பின்னர் நானே அதில் விழுந்தேன்! அது மிகவும் வலி நிறைந்த ஓர் அனுபவம்!

பொதுவாக, நாம் யாரும் பிறருக்காகக் கண்ணி அமைக்கிறதில்லை. ஆனால், மற்றவர்கள் ஏதேனும் ஒரு கண்ணியில் விழுந்து விட்டால், நாம் மகிழ்ச்சி அடைகிறோமா? ஏதோ சில காரணங்களுக்காக, அடுத்தவர் வீழ்ச்சி அடைய வேண்டும் என நாம் விரும்புகிறோமா? 

நீங்கள் பிறருக்காக ஒரு கண்ணியை அமைத்தால், நீங்களே அதில் விழுவீர்கள்  (நீதி. 26:27). நீங்கள் விழுகிறதைப் பார்த்து, அந்த படுகுழியில் விழுந்திருக்க வேண்டியவர்கள் உங்களை எள்ளி நகையாடக் கூடும்! 

‘மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத். 7:12)' என்ற வேதத்தின் பொன்னான விதியானது, இங்கே சிறந்த நியமமாக இருக்கிறது. 

உங்களுக்கு, பிறர் வீழ்வதைக் காண ஒரு விருப்பம் இருந்தாலே கூட, தேவனல்ல, சாத்தானே உங்களில் கிரியை நடப்பிக்கிறான்! 

ஜெபம்: கர்த்தாவே! எனக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அதையே நான் மற்றவர்களுக்குச் செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

Who is truly wise?

What is your good name?

God doesn’t exist!?