பாஷைக் குழப்பம் !


ஆண்டவரே!... அவர்கள் பாஷையைப் பிரிந்து போகப்பண்ணும். கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன். சங் 55:9

நீங்கள் உங்களுடைய தாய்மொழியிலே பேசும்பொழுதே எத்தனை முறை "இல்லை, கொஞ்சம் பொறுங்கள்!  நான் வேறு விதமாய்க் கூற முயற்சிக்கிறேன்" என்ற வாக்கியத்தை பயன்படுத்தி இருக்கிறீர்கள்??  அதுதான்... தேவன் பாஷையிலே கொண்டு வந்த சிக்கல்!!

ஒருவேளை தாவீது ஆதியாகமம் 11ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட "பாபேல் சம்பவத்தை" நினைவு கூர்ந்தவராக, தேவனிடம், தன் சத்துருக்களின் பாஷையைப் பிரிந்து போகப்பண்ணும்படி கேட்கிறார் போலும்!! (சங் 55:9)

ஆதியிலே ஒரே பாஷை தான் இருந்தது (ஆதி 11:1).  மனிதரின் நோக்கங்கள் தவறான போது, தேவன் அவர்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கினார்!! (ஆதி. 11:7)

ஆனாலும், தேவன் தாம் படைத்த பாஷைகள் உட்பட அனைத்தையும் நேசிக்கிறார்! அவரே பற்பல பாஷைகளைப் பேசும் வரங்களையும் (1கொரி 12:28),  அந்த பாஷைகளை வியாக்கியானம் பண்ணும் வரங்களையும் (1கொரி 12:10) கொடுக்கிறார்!! மேலும் அவர், பூமியிலுள்ள ஒவ்வொரு பாஷைக்காரரிலுமிருந்து பிரதிநிதிகளையும் பரலோகத்திற்குக் கொண்டு வரப் போகிறார் (வெளி 7:9).

உலகெங்கிலும் தோராயமாக 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஒருவராலும் சரியான தொகையைக் கணக்கிட்டுக் கூற இயலாது... ஏனெனில், ஒவ்வொரு தனிநபரும் தனக்கே உரித்தான வழியிலே பாஷைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்பப் பேசுகின்றனர்! அதனால் பாஷைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன! இதுவும் தேவனுடைய படைப்பாற்றலே!!

ஜெபம்: தேவனே! நீர் எனக்குத் தந்திருக்கிற பாஷைகளின் வரத்தை நான் சரியான நோக்கத்தோடு பயன்படுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

What is your good name?

Who is truly wise?

God doesn’t exist!?