பறந்து செல்லுங்கள்


ஓ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.  சங் 55: 6

என் குழந்தை பருவத்தில் நான் பறவைகளைப் போல பறக்க முடியுமா என்று விரும்பினதுண்டு. பல ஆண்டுகளுக்குப் பிறகு, விமானத்தில் பறக்க எனக்கு  வாய்ப்பு கிடைத்தபோது,  பறவைகளின் அனுபவமும் இதைப்போலவே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 

வாழ்க்கையில் கடினமான சமயங்களுக்கு மத்தியில் நாம் எங்காவது தப்பிக்க அடிக்கடி விரும்பியிருக்கலாம். தாவீது கூட இங்கே அதேபோன்ற அனுபவத்தை அனுபவிக்கிறார்.

கர்த்தரை நம்புகிறவர்கள் புதுப்பெலன் அடைந்து,  கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் (ஏசா 40:31).  "அப்பொழுது இயேசு, ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;  நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று கூறினார்.” (மத் 11:28)

இந்த உலகம் நம்முடைய வீடு அல்ல. ஒரு நாள் நாம் இங்கிருந்து பறந்துபோய் என்றென்றும் ஓய்வெடுப்போம் (சங் 90:10).

உண்மையாயிருப்பேன் சிலுவைச் செய்திக்கு;
இன்பமாய் நிந்தையைச் சகிப்பேன்.
அழைப்பார் ஒருநாள், செல்லுவேன் என் இல்லம்; 
அங்கு மகிமை என் பங்கு.  (‘Old Rugged Cross’ song)

நாம் பூமியில் வாழும் வரை,  நாம் எப்போதும் ஓய்வெடுக்க ஏங்குவோம்!

ஜெபம்: ஆண்டவரே, எனது தற்போதைய கஷ்டங்களை மறந்து,  உம்மில் எப்போதும் இளைப்பாறுதலைக் காண எனக்கு உதவும். ஆமென்!

(translated from English to Tamil by Melwin Kingsley)

Comments

Popular posts from this blog

What is your good name?

Who is truly wise?

God doesn’t exist!?