வானபரியந்தம் உயர்ந்தது!

B. A. Manakala

உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. சங். 57:10.

பட்டங்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கையில், ஒரு பையன் மற்றொருவனிடம் , "இப்போது என் பட்டம் கிட்டத்தட்ட வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது" என்று கூறினான். 

'வானம் எவ்வளவு உயர்ந்தது?' என்ற கேள்விக்கான பதிலை எவரேனும் கூற முடியுமாயின், 'தேவனின் அன்பு எவ்வளவு தவறாதது' என்பதைக் கூறுவதும் சாத்தியமாகும். தாவீது தன் வாழ்வில் இந்த அன்பை அனுபவித்தார் (57:10).

தேவனின் அன்பு தவறாதது. அது அனைத்துத் திசைகளிலும் எல்லையற்றது. சகல பரிசுத்தவான்களோடுங்கூட, அவருடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, . . . அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாவீர்களாக. (எபே 3:18,19)

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், எவ்வளவாய் அவரது அன்பை அனுபவிக்கிறீர்கள்? 

ஒருவேளை, நீங்கள் கிட்டத்தட்ட வானத்தைத் தொடலாம்; ஆனால், தேவன் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு என்பதை உங்களால் அளவிட முடியாது! 

ஜெபம்: ஓ தேவனே, உமது அன்பைப் பற்றி இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ள, ஒவ்வொரு நாளும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

What is your good name?

Who is truly wise?

God doesn’t exist!?