சக்தி வாய்ந்த செட்டைகள்!

B. A. Manakala

எனக்கு இரங்கும் தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக் கொள்ளுகிறது. விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். சங். 57:1.

எதிரி தாக்குகிற போது, தாய்ப்பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். எதிரியின் அருகாமையை உணர்ந்து கொண்ட உடனேயே, அது உரத்த சத்தமிட்டு, குஞ்சுகள் அனைத்தையும் தன் செட்டைகளுக்கடியில் நொடிப்பொழுதிலே சேர்த்துக் கொள்கிறது. எதிரி மறைந்துபோன பின்னர், குஞ்சுகளை வெளியே விட்டு விடுகிறது. 

இங்கே தாவீது சவுலை விட்டு ஓடிப்போய்க் கொண்டிருந்தாலும், சத்துரு கடந்து போகுமட்டும், தேவனுடைய செட்டைகளின் கீழ் தனக்கு இருக்கிற பாதுகாப்பை அவர் உணர்ந்து கொள்கிறார் (சங்  57:1).

தேவனுடைய செட்டைகளின் அடியிலிருந்து, நம்மை ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அவர் நம்மில் இருக்கிறார். அவர் நம் சத்துருவைக் காட்டிலும் பெரியவர் (1யோவா. 4:4). அவர் நமக்கு முன்னும், பின்னும், அருகிலும், மேலும், கீழும் இருக்கிறார்! 

உங்கள் வாழ்க்கையில், தேவனின் பாதுகாவலை நீங்கள் எங்ஙனம் உணர்கிறீர்கள்? 

தேவனின் 'கற்பனைச் செட்டைகள்' மிகவும் பலம் வாய்ந்தவை! 

ஜெபம்: கர்த்தாவே! எந்த ஒரு சத்துருவும் என்னைத் தாக்கா வண்ணம், நான் உம் செட்டைகளின் நிழல் மறைவிலே ஒளிந்து கொள்ள என்னை அனுமதியும். ஆமென்!



(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

What is your good name?

Who is truly wise?

God doesn’t exist!?