பரத்திலிருந்து உதவி

B. A. Manakala

என்னை விழுங்கப் பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி என்னை இரட்சிப்பார். சங். 57:3.

ஒருமுறை, தானியேல் என்ற மனிதர் சிங்கங்களின் கெபியிலே எறியப்பட்டார். ஏனெனில், 'ராஜாவை நோக்கி மட்டுமே விண்ணப்பம் பண்ண வேண்டும்' என்ற ராஜ கட்டளைக்கு அவர் கீழ்ப்படியவில்லை. ஆயினும், தேவன் சிங்கங்களின் வாயை அடைத்துப் போட்டதினால், அவர் ஒரு சேதமும் அடையாமல் மறுநாளிலே வெளியே வந்தார்!

இங்கே, தாவீதும் சிங்கங்களால் சூழப்பட்டிருந்தார் (சங். 57:4). ஆனால், தானியேலைப் போலவே அவரும், தான் பரலோகத்திலிருந்து பெறப் போகிற உதவியைப் பற்றின நிச்சயத்தோடு இருந்தார் (சங். 57:3).

நமது உண்மையான உதவி கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது (சங். 121:1-2)

பரலோகத்திலிருந்து நீங்கள் பெறப் போகிற உதவியைக் குறித்து நீங்கள் எந்த அளவுக்கு நிச்சயத்தோடு இருக்கிறீர்கள்? 

நாம் அவருக்காகக் காத்திருக்கிறோமா என்பதைப் பார்க்கும்படி பரலோகத்திலுள்ள நம் உதவியாளர் நமக்காகக் காத்திருக்கிறார். 

ஜெபம்: கர்த்தாவே! பரலோகத்திலிருந்து எனக்குக் கிடைக்கின்ற மகத்தான உதவியை நான் பயன்படுத்திக் கொள்ள, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

தனிமை ஆசை?

Cause humiliation?

காலை, மதிய மற்றும் இரவு உணவு!