நம்பிக்கையோடிருங்கள்!

B. A. Manakala

என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. தேவனே என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன். சங். 57:7.

ஒரு குட்டி கங்காரு, தன் தாயின் வயிற்றிலுள்ள பைக்குள் இருக்கையில், மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறது. 

நம்பிக்கையோடிருப்பதா?  ஆனால் எப்படி?  யார் மீது? தாவீதின் நம்பிக்கை கர்த்தர் மீது இருந்தது (57:7). அவர் கோலியாத்தைத் தோற்கடிக்கையில், அது வெளிப்படையானது. 

உங்கள் சுய புத்தியைச் சாராதிருங்கள் (நீதி. 3:5). ஏனெனில், அது முட்டாள்தனமாகி விடும் (28:26). எரேமியா 17:7 இவ்வாறு கூறுகிறது: "கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்."

நம்பிக்கையோடிருங்கள், ஏனென்றால், உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை... முடிய நடத்தி வருவார் (பிலி. 1:5).

உங்கள் நம்பிக்கையின் அளவை உயர்த்துவதற்கு, நீங்கள் கர்த்தரை எங்ஙனம் நம்புவீர்கள்? 

தன்னம்பிக்கை ஒருவேளை உங்களை ஓர் நாள் ஏமாற்றலாம்;  தேவன் ஏமாற்ற மாட்டார்! 

ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் உம் மீது நம்பிக்கையுடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

Cause humiliation?

தனிமை ஆசை?

காலை, மதிய மற்றும் இரவு உணவு!